பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான (FORUM)நிறுவனத்தினால் மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன

தற்போது நாட்டில் வைரஸ் தாக்கத்தின் காரணமாக சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்களுக்கான சேவையில் பல அரசஅரசசார்பற்ற நிறுவணங்கள் பங்காற்றிவரும் நிலையில் எமது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் நிறுவனத்தின் நிவாரணப்பனிகளோடு பொதுமக்களுக்கும் மக்களுக்காக தமது சேவையினை வழங்கிகொண்டிருக்கும் நிறுவனங்களுக்கும் இலவசமாக முககவசங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது ஏற்கனவே எமது அமைப்பு 1000 முககவசங்களை பொதுமக்களுக்கு வழங்கியூள்ள நிலையில் இன்றும் எமது மன்னார் நகரத்தினை இக்கட்டான இச்சூழ்நிலையிலும் சுத்தமாக வைத்திருப்பதற்கு தமது பூரன ஒத்துழைப்புக்களை வழங்கிவரும் சுத்திகரிப்பு பணியாளர்களுக்கு எமது நிறுவணம் சார்பான நன்றிகளை தெரிவிப்பதுடன் அவர்களுக்கான முக க்கவசங்களை இன்று மன்னார் நகர சபை செயலாளர் அவர்களிடம் எமது நிறுவனத்தின் இணைப்பாளர் திலிபன் வழங்கி வைத்துள்ளார்


மேலும் மன்னார் மாவட்டத்தின் தபால் சேவையினை தற்போதைய இடர்காலத்திலும் மருந்துப்பொருட்கள் மற்றும் கிளினிக் அட்டைகளை விநியோகம் செய்கின்ற தபால் ஊழியர்களுக்கும் அவர்களுக்கான பாதுகாப்பை கருத்திற்கொண்டு எமது நிறுவனத்தினால் முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
மேலும் அவசர பிரிவூ நோயாளி காவூகை வண்டி ஊழியர்களுக்கு அவர்களது பாதுகாப்பு கருதி முகக்வசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன மேலும் மன்னார் சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் பிரிவினருக்கும் எமது நிறுவனத்தினால் முககவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன

மேலும் மன்னார் மாவட்டத்தில் நிவாரணப்பனிகளில் ஈடுபட்டு வரும் துயர்துடைப்பு மறுவாழ்வூச் சங்கம் மற்றும் மெசிடோ நிறுவனம் ஆகியோருக்கும் எமது நிறுவனத்தினால் முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *