தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மார்க்கெட் நடிப்பில் உச்சத்தை தொட்ட தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளையும் அதற்கு ஈடாக சந்தித்துள்ளார். குறிப்பாக அவரது முக்கோண காதல் ஊரறிந்த உண்மை. நயனின் முதல் காதலரான சிம்புவுடன் நெருக்கமாக இருந்த லிப்லாக் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து அந்த காதல் பிரேக்அப் ஆகிவிட பின்னர் பிரபுதேவாவை காதலிக்க துவங்கினார். பிரபு தேவாவின் மனைவி இதை ஊர் முழுக்க அம்பலப்படுத்தி நயன்தாரவை அசிங்கப்படுத்தியதால் அந்த காதலையும் முறித்துக்கொண்டார் நயன். பின்னர் தற்போது விக்னேஷ் சிவனுடன் தீவிர காதலில் இருந்து வருகிறார். இது விரைவில் திருமணத்தில் முடியவுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், பிரபு தேவாவின் மனைவி ரம்லத் பேட்டி ஒன்றில் , ” ”பிரபு தேவா நயன்தாராவை காதலிக்கிறார் என்று முதலில் என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் அவர் ஒரு நேர்மையான கணவராக கடந்த பதினைந்து ஆண்டுகளாக குடும்பத்தை கவனித்து வந்தார். எங்களுக்கு புதிதாக வீடு கூட வாங்கி கொடுத்தார். ஆனால் எப்போ நயன்தாரா என் கணவரை அபகரித்தாரோ அப்போது அவர் மாறியதை நான் உணர்ந்தேன். அடுத்தவர் கணவனை அபகரித்த நயன்தாராவுக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும். மேலும், நயன்தாராவை நான் எங்கு பார்த்தாலும் அங்கேயே எட்டி உதைப்பேன்” என்று ஆவேசமாக கூறினார்.