கொரோனா வைரஸ்: சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – இதுதான் காரணம்

உலகளவில் இதுவரை 1,918,855 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 448,998 ஆக உள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119,588 ஆக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 581,679 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது.

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மெல்ல ஏறுமுகம் காணுகிறது.

சீனாவில் ஒருகட்டத்தில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்தனர். ஆனால், கடந்த இரு தினங்களாகப் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்: பேய் போல வேடமிட்டு திரியும் மக்கள் - இதுதான் காரணம்

அதற்கு முந்தைய தினம் இது 108 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கைதான் கடந்த ஐந்து வாரங்களின் அதிகம்.

மீண்டும் சீனாவில்?

சீனாவில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்தவர்கள் என்கிறது அந்நாட்டு சுகாதாரத் துறை.

புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 89 பேரில் 86 பேர் ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்கிறது சீனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *